riddles in Tamil

Riddles In Tamil | விடுகதைகள் | Part 1

Post Views : 33 views

தமிழ் விடுகதைகள்

விடுகதைகள் மூளையில் செயல்பாட்டையும் திறனையும் அதிகரிக்கின்றன. விடுகதை ஒரு சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டு ஆகும். இது மூளையில் சிந்தனை திறனை அதிகரிக்கும். இந்த விளையாட்டின் மூலம் குழந்தைகள் புதிய தமிழ் சொற்களை அறிந்து கொள்வார்கள். சரி இப்பொழுது விடுகதைக்கு செல்வோம்.

  • குயவர் செய்யாத பானைக்குள் வானம் பெய்யாத தண்ணீர். அது என்ன ?

         விடை : இளநீர்

  • என்னை சொல்லி கெட்டவர் இல்லை என் எதிரியை சொல்லி வாழ்ந்தவர் இல்லை. அது என்ன ?

          விடை : உண்மை

  • போ என்றால் நில்லாமல் ஓடுகிறான் ஓடும் வழி தெரிகிறது உருவம் தெரியவில்லை. அது என்ன?

          விடை : டெலிபோன் செய்தி

  • மழையில் பிறந்தேன் மடுவில் வளர்ந்தேன் ஆடி அடங்கியதும் ஆழ்கடலில் விழுந்தேன். அது என்ன ?                 விடை : ஆறு
  • பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து. அது என்ன?

         விடை : தேன்

  • சொல்லாமல் வருவான் கண்ணீர் விட்டு அழுவான் சொல்லாமலே போவான். அது என்ன?

         விடை : மழை

  • சிவப்பு மூக்கழகி சிங்கார நடை அழகி பச்சை உடை அணிந்து மழலை மொழி பேசிடுவாள் .அது என்ன ?              விடை : கிளி
  • சிவப்பாடை அணிந்து வீதியில் சிலையாக நிற்பான் செய்திகளை கொடுத்தால் சேரும் இடம் சேர்ப்பான். அது என்ன ?

         விடை : தபால் பெட்டி

  • ஆறு பட்டைகளை உடையவன் கடைகளை சுற்றுபவன். அது என்ன?

         விடை : வெண்டைக்காய்

  • சொன்ன சொல் தப்பாது அதன் சொல்லுக்கு மறுப்பு கிடையாது. அது என்ன?                                                                        விடை : காலண்டர்
  • வட்ட வடிவழகன் வந்தானடி காலையிலே எட்டி நின்று பேசாமலே சென்றானடி மாலையிலே. அவன் யார்?              விடை : சூரியன்
  • ஓடிப் படரும் ஆனால் கொடியல்ல ஒளி மிக கொடுக்கும் ஆனால் நிலவு அல்ல. அது என்ன.                                       விடை : மின்சாரம்
  • ஆழ் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன .

         விடை : மத்து

  • சின்னப்பிள்ளை ஓடி ஓடி அணை கட்டுது .அது என்ன?

         விடை : ஊசி

  • பொண்ணுக்கு சமமானது, போனால் திரும்பாது, விலை கொடுத்தாலும் கிடைக்காது.  அது என்ன?

         விடை : நேரம்

CHECK OUT OUR OTHER WORKSHEETS

PLEASE LIKE AND FOLLOW ME ON PINTEREST FACEBOOK AND INSTAGRAM

PRACTICE MAKES YOU TO EXCELLENT KEEP PRACTICING

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *