Contents
தமிழ் விடுகதைகள்
விடுகதைகள் மூளையில் செயல்பாட்டையும் திறனையும் அதிகரிக்கின்றன. விடுகதை ஒரு சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டு ஆகும். இது மூளையில் சிந்தனை திறனை அதிகரிக்கும். இந்த விளையாட்டின் மூலம் குழந்தைகள் புதிய தமிழ் சொற்களை அறிந்து கொள்வார்கள். சரி இப்பொழுது விடுகதைக்கு செல்வோம்.
- பச்சை நிற வீட்டுக்குள்ளே பழுப்பு நிற வீடு பழுப்பு நிற வீட்டுக்குள்ளே வெள்ளை நிற வீடு வெள்ளை நிற வீட்டுக்குள்ளே தேங்கிய குளம். அது என்ன? விடை : தேங்காய்
- தலை இல்லாதவன் தலையை சுமப்பான். அவன் யார் ? விடை : தலையணை
- நடக்காத கால் உண்டு மடக்காத கை உண்டு வளையாத முதுகு உண்டு. அது என்ன? விடை : நாற்காலி
- உடல் கொண்டு குத்திடுவான் உதிரைகளை ஒன்றிணைப்பான் அவன் யார்? விடை : ஊசி
- என்னை வேண்டா விளக்கு. அது என்ன? விடை : மெழுகுவர்த்தி
- இருட்டுலே வருவான் திருட்டுப் பையன் இருப்பதை குடிப்பான் சிட்டுப் பையன். அவன் யார்? விடை : பூனை
- அம்மா பின்னிய நூலை அவிழ்த்தா போச்சு. அது என்ன? விடை : இடியாப்பம்
- மூட்டை தூக்கி வரும் நத்தை அல்ல தண்ணீரில் தத்தி வரும் தவளை அல்ல. அது என்ன? விடை : ஆமை
- காற்றைக் குடிக்கும் காற்றினிலே மிதக்கும். அது என்ன? விடை : பலூன்
- கடமை வீரன் காக்கி சட்டை அணிய மாட்டான். அவன் யார்? விடை : நாய்
- கல்லும் முள்ளும் தாக்காமல் காலம் எல்லாம் காத்திடுவான். அவன் யார்? விடை : செருப்பு
- கருத்தபுல் ரத்தம் குடிக்கும். அது என்ன? விடை : தலைமுடி
- மழையில் பிறக்கும் அருவி அல்ல சுவையைக் கொடுக்கும் பானம் அல்ல. அது என்ன? விடை : ஆறு
- விரல் உண்டு நகம் இல்லை கை உண்டு தசை இல்லை. அது என்ன? விடை : கை உரை
- நானாக வரமாட்டேன் நடமாட மாட்டேன் பேசவும் மாட்டேன் படுக்கையோடு கிடப்பேன் நடுங்கினால் நண்பன் ஆவேன். அது என்ன? விடை : போர்வை
CHECK OUT OUR OTHER WORKSHEETS
- Terrestrial Animals Coloring Pages | Free Printable
- Cartoon Characters Coloring Pages | 25 Free Printable
- Rangoli Coloring Pages | Free Printable
- Fruits Coloring Pages | Free Printable
- Pongal Theme | Free Coloring Worksheets
- Playdough Mats – Fun Activity For kids | Free Printables
- 10 Fun DIY Activity for Shapes and Colors – Free worksheets
- Three Fun Activity Based On Body Parts
- 3 Fun Paper Activity for Kindergarten Kids
- Me and My Family Fun Activity | Free Worksheets
- Fingerprint Activity for Kids – Free Worksheets
- Internal organs fun activity for kindergarten kids
- Tamil Mei Ezhuthukkal | Free worksheets
- Free Printable Birthday Cards For Kids
- Grammar For Class 1 – Naming, Doing, and Describing words | Free Worksheets
PLEASE LIKE AND FOLLOW ME ON PINTEREST FACEBOOK AND INSTAGRAM
PRACTICE MAKES YOU TO EXCELLENT KEEP PRACTICING