தமிழ் விடுகதைகள்
விடுகதைகள் மூளையில் செயல்பாட்டையும் திறனையும் அதிகரிக்கின்றன. விடுகதை ஒரு சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டு ஆகும். இது மூளையில் சிந்தனை திறனை அதிகரிக்கும். இந்த விளையாட்டின் மூலம் குழந்தைகள் புதிய தமிழ் சொற்களை அறிந்து கொள்வார்கள். சரி இப்பொழுது விடுகதைக்கு செல்வோம்.
- வெள்ளை பாத்திரம் மூடி உள்ள பாத்திரம் உடைக்காமல் திறக்க முடியாது. அது என்ன? விடை : முட்டை
- உருண்டு இருக்கும் பாறை மேல் திரண்டு நிற்கும் கோரை புல். அது என்ன?
விடை :தலைமுடி
- மண்ணில் விளையும் மங்கையரை அழகு செய்யும். அது என்ன?
விடை : மஞ்சள்
- உச்சி குடும்பி காரனுக்கு கொள்ளி வைத்தால் கோபம் வரும். அவன் யார்? விடை : பட்டாசு
- ஊருக்கு ஊர் செல்லும் ஆனால் ஊர் வழியே செல்லாது .அது என்ன?
விடை : விமானம்
- முத்தமிழை கேட்கும் மூடாத கதவுகள் .அது என்ன?
விடை : காது
- தலையை செய்தினால் கலையை தீட்டலாம். அது என்ன?
விடை : பென்சில்
- விண்ணிலிருந்து குதிப்பான் மண்ணில் வந்து ஓடுவான். அவன் யார்?
விடை : மழை நீர்
- பூமி மேலே ரேகை அது மேலே வண்டி. அது என்ன?
விடை : ரோடு
- உடன் பிறந்தவன் உயிர் இல்லாதவன். அவன் யார்?
விடை : நிழல்
- வாயிலே தோன்றி வாயாலே மறையும் பூ. அது என்ன?
விடை : சிரிப்பு
- நீர் தெரியாத கிணற்றில் ஊறிவரும் தண்ணீர். அது என்ன?
விடை : கண்ணீர்
- காற்றிலே ஆடுவான் கயிற்றிலே ஓடுவான். அவன் யார் ?
விடை : பட்டம்
- காதை கடிக்கும் காட்சி காட்டும். அது என்ன?
விடை : மூக்கு கண்ணாடி
- நாலு கட்டையில் உருவாகி நடு சுவரில் குடியிருப்பான். அவன் யார்?
விடை : ஜன்னல்
CHECK OUT OUR OTHER WORKSHEETS
- Terrestrial Animals Coloring Pages | Free Printable
- Cartoon Characters Coloring Pages | 25 Free Printable
- Rangoli Coloring Pages | Free Printable
- Fruits Coloring Pages | Free Printable
- Pongal Theme | Free Coloring Worksheets
- Playdough Mats – Fun Activity For kids | Free Printables
- 10 Fun DIY Activity for Shapes and Colors – Free worksheets
- Three Fun Activity Based On Body Parts
- 3 Fun Paper Activity for Kindergarten Kids
- Me and My Family Fun Activity | Free Worksheets
- Fingerprint Activity for Kids – Free Worksheets
- Internal organs fun activity for kindergarten kids
- Tamil Mei Ezhuthukkal | Free worksheets
- Free Printable Birthday Cards For Kids
- Grammar For Class 1 – Naming, Doing, and Describing words | Free Worksheets
PLEASE LIKE AND FOLLOW ME ON PINTEREST FACEBOOK AND INSTAGRAM
PRACTICE MAKES YOU TO EXCELLENT KEEP PRACTICING